கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்குப் பிணை!

நான்கு கிலோக் கிராம் கஞ்சாவைத் தனது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவருக்கு கடந்த திங்கட்கிழமை(08) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதிவான் மன்றின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4கிலோ கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டில் இரண்டு பேர் தொடர்புபட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் சம்பவ தினம் அன்றே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இரண்டாவது சந்தேகநபர் பிணை மனுக் கோரியிருந்தார். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கைப் பரசீலித்த நீதவான் குறித்த சந்தேகநபர் ஏழரை மாதங்களாக விளக்க மறியலில் இருந்து வருகின்றார். சந்தேகநபரைப் பிணையில் விடுவிபபதற்கு அரசசட்டத்தரணி ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகவே, குறித்த நபரை 50 ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்வதற்கு மன்று அனுமதியளிக்கின்றது என உத்தரவு பிறப்பித்தார்.
Related posts:
|
|