ஒலிபரப்பு தரக்கட்டமைப்பு மதிப்பீடு தொடர்பில் சுயாதீன புத்திஜீவிகளின் அறிக்கை!

இலங்கையில் ஒலிபரப்பு தரக்கட்டமைப்பு மதிப்பீடு தொடர்பில் சுயாதீன புத்திஜீவிகளின் அறிக்கை கொழும்பு பண்டரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை வெளியிடப்படவுள்ளது.
நாட்டிலுள்ள தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு ஊடகங்களின்; நேயர்கள் மற்றும் பார்வையாளர்களின் கருத்துக்களை மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்ட்ட இந்த மதிப்பீட்டுக்காக ஒருவருட காலத்தை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒலிபரப்பு முகாமையாளரதும் விளம்பர துறை பிரதிநிதிகளினதும், ஊடக நிறுவன பிரதிநிதிகளினதும் தரப்படுத்தல் நிறுவனங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளுக்கும் அமைவாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கே.ஏ.பி.சித்திசேன, ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைக்கழத்தின் பேராசிரியர் ரத்னசிறி அரங்கல ஆகியோர் தலைமையிலான அறிஞர்களின் சுயாதீன குழுவொன்று இந்த அறிக்கையை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|