ஒரே குடும்பத்தை சேர்ந்த எழுவருக்கு மரண தண்டனை!
Friday, August 5th, 2016
நுவரெலியா பொது நீதிமன்றத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் 2000 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி பெரியசாமி சன்முகநாதனை தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தொடர்பில் நடந்த மிக நீண்ட விவாதத்திற்கு பின் உயர் நீதிமன்ற நீதிபதி இம் மரணத்தண்டனையினை விதித்துள்ளார்.
இதேவேளை, குறித்த 7 சந்தேகநபர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபா வீதம் தண்டை பணமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நெடுந்தீவு பிரதேசசபை விசாரணை முடக்கம்!
மேலும் குறைவடைகிறது மரக்கறிகளின் விலைகள்!
யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு - சுகாதார அதிகாரிகளுக்கு வட...
|
|
|


