ஒன்பதாவது நாளாகவும் இடம்பெறும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Wednesday, March 8th, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையற்ற போராட்டம் நேற்றும் (07) ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

பட்டதாரிகளின் கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் வீதியிலேயே தமது மூன்று வேளை உணவையும்  உண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை யாழ். வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து தருவதாக எங்களுடைய அரசியல் தலைமைகளாலும் ,அரசியல் வாதிகளாலும், வடக்கு மாகாண ஆளுநராலும் பொய்யான  வாக்குறுதிகள் வழங்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தமது கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நாளை புதன்கிழமை(08) காலை-09.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மனித சங்கிலிப் போராட்டத்தை நடாத்துவதற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் திட்டமிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: