ஆணைக்குழுக்களின் செயற்பாடு தொடர்பில் சபாநாயகர் விளக்கம்!

Wednesday, October 19th, 2016

ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை இழக்கப்படும் வகையில் எந்தவித அழுத்தத்திற்கும் இடைமளிக்கக்கூடாது என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிலைப்பாடாகும் என்று அரசியல் யாப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தின் உயர் பிரிவின் தெளிவற்ற நிலைமை தொடர்பில் அரசியல் யாப்பு பேரவைக்கு அறிவிக்கப்பட்டதா? என்பது குறித்து ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அரசியல் யாப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விளக்கம் கோரியிருந்தனர்.

இதுகுறித்து  சுயாதீன ஆணைக்குழு தலைவர்களுக்கும், அங்கத்தவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய விடயங்களை தெளிவுபடுத்தியிருப்பதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுக்களின் செயற்பாடு அல்லது சுயாதீனத் தன்மை குறித்து ஜனாதிபதியினாலோ பிரதமரினாலோ ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்து தெரிவிக்கப்படவில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்த ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை இழக்கப்படும் வகையில் எந்தவித அழுத்தத்திற்கும் இடைமளிக்கக்கூடாது என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிலைப்பாடாகும்.

பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் மூலம் நிறைவேற்றப்படும் தேசிய பணி நம்பிக்கையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்த அரசியல் யாப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த கௌரவமான பணியை பாராட்டுவதற்கு பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்..

9fa053d716a50f8cf3c2dff0ec074957_XL

Related posts: