ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் பதவிப் பிரமாணம் !.
Friday, May 10th, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று (10) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை 9.30 க்கு நாடாளுமன்றம் கூடியதை தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
முன்பதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை!
இன்று முதல் விசேட தொடருந்துச் சேவைகள்!
தொடர் மழை: இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!
|
|
|


