ஏழாலையில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து!

உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்று வந்த குடும்ப பிரச்சினை கத்திக்குத்தில் முடிவடைந்ததில் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் 10.45 மணியளவில் ஏழாலை வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கட்டுவன் மேற்கு தெல்லிப்பழையைச் சேர்ந்த சிவஞானரத்தினம் சிவானந்தன் என்பவரே வயிற்றில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய்தர்க்கத்தில் இடம்பெற்ற குடும்பப் பிரச்சினை பின்னர் கைகலப்பாக மாறியது.
இதன் போது உடைமையில் இருந்தக் கத்தியால் மேற்படி நபருக்கு அவரது மச்சான் குத்தியதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். அயலவர்களின் உதவியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
|
|