எரிபொருள் இல்லையென்கிறார்கள் – ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன – அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

கடந்த பத்து நாட்களாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு எரிபொருளை வழங்காவிட்டாலும், பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வாகனங்கள் பாதையில் பயணிப்பதன் மூலம் பெருமளவிலான மக்கள் எரிபொருளை சேமித்து வைத்திருப்பதை இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை பாதாள கோஷ்டியினரே கட்டுப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் எரிபொருளை எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பு அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதியின் தீர்மானத்தை ஏற்க முடியாது -நவின் டி சொய்சா !
விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு மழைநீரைத் தேக்கிவைக்கத் திட்டம்!
“போட் சிட்டி”யில் நடைப்பாதை திறப்பு – இலங்கையின் அரச தலைவர்கள் பங்கேற்பு!
|
|