ஊர்காவற்றுறை ஆட்டோ சாரதிகளுக்கு வீதி ஒழுங்கு, முதலுதவிக் கருத்தரங்கு!
Monday, December 5th, 2016
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, ஊர்காவற்றுறை பொலிஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றுடன் இணைந்து ஊர்காவற்றுறை பகுதியில் செய்யப்படும் ஆட்டோ சாரதிகளுக்கு வீதி ஒழுங்கு மற்றும் முதலுதவி விழிப்புணர்வு கருத்தரங்கும் பயிற்சியும் வழங்கப்பட்டன.
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.குணதாஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆட்டோ சாரதிகளுக்கான வீதி ஒழுங்கமுறை தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் விழிப்புணர்வும், விளக்கமும் வழங்கப்பட்டன. மேலும் வீதிகளில் எதிர்பாராதவிதமாக இடம்பெறும் விபத்துக்களின் போது ஆட்டோ சாரதிகள் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி தொடர்பான விளக்கமும் பயிற்சியும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளால் வழங்கப்பட்டன. அந்த கருத்தரங்கில் 30க்கும் றே;பட்ட சாரதிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Related posts:
|
|
|


