உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு யாழ் மாநகர சபையின் விழிப்புணர்வு நிகழ்வு!

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் திண்மக்கழிவுகளை தரம் பிரிக்கும் முதலாவது விழிப்புணர்வு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(03-06-2016) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி மே.மி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் யாழ் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு, சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள், உத்தியாகத்தர்கள் கலந்து கொண்டு மேற்படி பாடசாலை மாணவர்களிற்குச் சூழல் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்கினர்.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு நூல்களும் வழங்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நிகழ்வானது சகல பாடசாலை மாணவர்கள் மத்தியியிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளைத் துப்பரவாக்கும் பணியை யாழ். மாநகர சபை , மாவட்டச் செயலகம் என்பன இணைந்து நேற்று வியாழக்கிழமை முன்னெடுத்தன. மாநகரப் பகுதி கழிவகற்றும் பிரிவினர், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
Related posts:
|
|