உரிமையாளர்கள் இல்லாவிடத்து அரசுடமையாக்கப்படும்!

உரிமை கோரப்படாத அல்லது உரிமையாளர்கள் இல்லாத காணிகள் மற்றும் பணம் என்பனவற்றை அரசுடமையாக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அண்மைக்காலமாக நடத்திய விசாரணைகளின் போது உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் பணம் பற்றிய தகவல்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளதால் உரிமை கோரப்படாத சொத்துக்கள், காணிகள், பணம் போன்றவற்றை அரசுடமையாக்குவதற்கு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகைப்பொருள் பாவனை 40சதவீதத்தினால் குறைவு - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!
நவீன உலகத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு கல்வி உரிமை - 21 வயதில் பட்டப்படிப்பு - 27 வயதில் கலாநி...
|
|