பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!

Friday, March 17th, 2017

இலங்கை பொலிஸார் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக நேற்று முன்தினம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியிருந்தது.

இந்தப் பேரணியைக் கலைப்பதற்கு பொலிஸாரும், கலகத்தடுப்பு பிரிவினரும் இணைந்து நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் என்பவற்றை நடத்தினர்.

இதன் காரணமாக இருதரப்பினருக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதோடு மேலும் சிலர் மீது கலகத்தடுப்பு பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணை நடத்தக்கோரி நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்காக QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் - முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறி...
ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – ஜனாதிபதியுடனான சந்திப்பில் அ...
இலங்கையின் விவசாயத்துறைக்கு உதவத் தயாராகும் இந்தியா - 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்கமதிக்கும் ந...