உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவி பொலிஸ் சேவையில்!
Tuesday, August 15th, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக பணியாற்றிய நிலையில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோத்தில் பலியான காவல்துறை பரிசோதகரின் மனைவியை மீண்டும் காவல்துறையில் இணைத்துக் கொள்ள தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவரால் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடு குறித்து ஆராய்ந்ததன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அவரின் இல்லம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகில் உள்ள காவல்துறை நிலையமான பள்ளம காவல்துறை நிலையத்தில் பணிப்புரிய நேற்று முதல் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Related posts:
31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருத்தரப்பட வேண்டும் - அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை!
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்...
குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைக்க 2 பில்லியன் நிதி ஒதுக்கீடு - நகர அபிவிருத்தி அதிகார சபை...
|
|
|


