31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருத்தரப்பட வேண்டும் – அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை!

Saturday, May 22nd, 2021

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள தாதியர்களது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை விடுவித்துள்ளது.

அத்துடன் தமக்கான தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில் சகல கடமைகளிலும் இருந்து விலக நேரிடும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக விசேட விடுமுறை, கர்ப்பிணி தாய்மார்களின் பாதுகாப்பு, 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு, விடுமுறை தின கொடுப்பனவு ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்யும் கால அவகாசம் நாளை நிறைவு!
எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை நீக்க கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை ...
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை -   கல்வி அமைச்சு தீர்மான...