உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வழங்கிய புதிய நியமனம்!

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவருக்கு இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் யாப்பின் 41(ஏ) மற்றும் 155 (ஏ) (1) சட்டப்பிரிவுக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டத்தையும்பெற்ற சட்டத்தரணியுமாவார்.
கொழும்பு விவேகானந்தா கல்லூரி, கொழும்பு டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியின் உப அதிபராகவும் கடமையாற்றி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றவராவார்.
Related posts:
முழு இழப்பீடும், சுயாதீன விசாரணையும் வேண்டும் - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வலியு...
முறைகேடுகளில் ஈடுபடும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பில் கோபா குழு அதிருப...
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி - தேர்தல்கள் ஆணைக்...
|
|