இளம் வர்த்தகர் சுலைமான் கொலை பல மாதங்கள் திட்டமிடப்பட்தொன்று!
Tuesday, August 30th, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை பல மாதங்களாக திட்டமிடப்பட்டு நிறைவெற்றப்பட்ட ஒன்று என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது வீட்டுக்கு அருகில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட சுலைமான் பின்னர் கேகாலை மாவனல்ல பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் காணாமல் போனபோது சுலைமான் பயணித்த பாதைகளாக கருதப்படும் கொழும்பு – 4, கொழும்பு – 6 மற்றும் கொழும்பு – 3 பகுதிகளின் சீ.சீ.டி.வி காட்சிகளும் அதன் பின்னர் அங்கிருந்து கேகாலை, மாவனல்லை மற்றும் ஹெம்மாத்துகம ஆகிய இடங்களுக்கு செல்லும் வழிகளில் உள்ள சீ.சீ.டி.வி காட்சிகளும் தற்போது சோதனையிடப்பட்டு வருகின்றன.
இந்தக்கொலை தொடர்பில் இதுவரை 75 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் இன்னும் கொலையாளிகள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை
Related posts:
பாடசாலை சமூகத்திற்கு கீழ்படியாத மாணவன் சான்று பெற்ற பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார்!
எமது அரசியல்வாதிகள் பிடல் கஸ்ரோவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் -ஜனதிபதி!
இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்...
|
|
|


