பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது – அதற்கு உறுதுணையாக இருப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Monday, July 11th, 2022

பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையின் முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும், இப்போது அகதிகள் நெருக்கடி இல்லை என்றும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும். தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருவதாகவும் அடுத்த நடவடிக்கை தொடர்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

“நாங்கள் இலங்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறோம், உதவி செய்ய முயல்கிறோம், எப்பொழுதும் உதவி செய்து வருகிறோம்” என அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் பிரிவினைவாத சக்திகளால் இலங்கைக்கு பேரபாயம் - பாத...
இலங்கையின் முயற்சிகளின் வெற்றியில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் - தெ ஹிந்துஸ்தான் ...
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பதிவு - ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம்...