இலவச சட்ட உதவி வழங்கும் நிகழ்வு!

Thursday, March 2nd, 2017

சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் சட்ட உதவி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணிவரை யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சட்டத்தரணிகளினதும் சட்ட உதவி ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகங்களில் பணி புரியும் சட்டதரணிகளினதும் பங்களிப்புடனும் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைவரும் கலந்து கொண்டு சட்ட பிரச்சனை தொடர்பில் ஆலோசனை பெற முடியும் என்பதுடன் உரிய பிரச்சினைகள் தொடர்பில் இலவச வழங்குகளும் தொடரப்பட்டு நடத்தியும் கொடுக்கப்படும்.

இச்சட்ட உதவியைப் பெற விரும்புவோர் அனைவும் தாம் வறுமைக்கோட்டுக்குட்பட்டோர் என்பதைத் தத்தமது கிராம அலுவலர் மூலம் உறுதிப்படுத்திய கடிதத்தைச் சமர்பிக்க வேண்டும். பராமரிப்பு, மணநீக்கம், குடும்ப வன்முறை, போன்ற வழக்குகளைத் தொடர வேண்டியிருப்பின் திருமணப் பதிவுச் சான்றிதழ், 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளிருப்பின்  அவர்களின் பிறப்புச் சான்றிதழ் ஆகிய வற்றின் பிரதிகளையும் வேறு விடங்கள் தொடர்பில் ஆலோசனை பெற விரும்புவோர் பொருத்ததான ஆவணங்களின் பிரதிகளையும் கொண்டு வந்து தர வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அறிவித்துள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: