இலங்கை இந்திய கூட்டுப் பயிற்சி நிறைவு!
Wednesday, November 9th, 2016
கடந்த 14 நாட்களாக நடைபெற்றன இலங்கை இந்திய இராணுவங்களுக்கிடையிலான கூட்டுப்பயிற்சி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வு அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த. இந்திய இராணுவத்தின் 6 அதிகாரிகள் உட்பட 45 படைவீரர்களும் இலங்கை இராணுவத்தினரும் பங்குபற்றினர் .
இந்த கூட்டுப்பயிற்சி நாடுகடந்த பயங்கரவாதம் இஇணைந்து செயலாற்றும் திறன்கள்இ கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் இரு தரப்பினரின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களை மேம்படுத்தும் வகையில் இடம் பெற்றது.
இறுதி நிறைவு நாள் நிகழ்வில் இந்திய இராணுவக் குழுவின் தலைவரான பிரிகேடியர் சுஜீத் சிவாஜி பாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.பயிற்சி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தலைமையில் நடைபெற்றதுடன் காலாட்படையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சகி கல்லகேயினால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதுவரை இக்கூட்டுப் பயிற்சி இந்தியாவில் இரு தடவைகளும் இலங்கை கொமாண்டோவின் குடா ஓயாபயிற்சி கல்லூரியில் ஒரு தடவையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


