இலங்கை அகதிக்கு நஷ்டஈடு!

Saturday, January 28th, 2017

சுவிசர்லாந்திடம் புகலிடம் கோரிய நிலையில், அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஷ்டஈடு வழங்க ஐரோப்பிய நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினரான இவர், கடந்த 2009ஆம் ஆண்டு அதில் இருந்து விலகி, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சுவிஸர்லாந்திடம் தஞ்சம் கோரினார்.

இந்தநிலையில், 2013ஆம் ஆண்டு அந்த நாட்டு அதிகாரிகள் அவரை நாடுகடத்தினர்.  இதனையடுத்து மீளவும் இலங்கை வந்த அவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்ததாக, ஜெனிவா மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தில், குறித்த இலங்கை அகதி குறிப்பிட்டிருந்தார்.  இதற்கமைய விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு 30,000 யூரோக்களை நஸ்டஈடாக வழங்க உத்தரவிட்டது.

அத்துடன், வழக்கு நடத்திய செலவாக 4770 யூரோவை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1472452289Untitled-1

Related posts: