இலங்கை அகதிகள் வருகை!

Tuesday, August 9th, 2016

அசாதார சூழ்நிலையின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 74 இலங்கைத் தமிழ் அகதிகள் இன்று (09) நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் சுயவிருப்பின் பேரில் மூன்று பிரிவினராக இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 தமிழ் அகதிகள் மதுரையிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதுடன் மற்றுமொரு குழுவினர் திருச்சியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.மூன்றாவது இலங்கை அகதிகள் மிஹின்லங்கா விமானம் மூலம் நாட்டிற்கு வந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

குறித்த 75 இலங்கை அகதிகளையும் மன்னார்,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,வவுனியா திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியமர்த்தவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மேலும் 109 குடும்பங்களைச் சேர்ந்த 64,000 பேர் தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி குறிப்பிட்டார்.

Related posts:

இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...
சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழில் பயிற்சி நெறிகள் - கல்...
வினைத்திறனற்று இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களம் - சேவை பெற செல்லும் மக்கள் பெரும் அவத...

வலது கையைத் துண்டாடிய 4 பேருக்கு ஒத்திவைத்த சிறை ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கவும் யாழ்ப்பாண மேல்நீதி...
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்கள் தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பெற்று...
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் - சி...