இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்!

Friday, September 1st, 2023

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் லங்கன் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளன.

அதேபோன்று நாட்டில் புதிதாக செயற்பாட்டை ஆரம்பித்துள்ள  சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை இன்று (01) முதல் உயர்த்தியுள்ளது.

இதன்படி,ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 358.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையும் 414.00 ஆக அதிகரித்துள்ளது.

லங்கா ஒயிட் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 338.00 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 356.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்களை மேலும் அசௌகரியப்படுத்தக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

எனவே, அதனை கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளது.

Related posts: