இலங்கையில் வைத்து சீன பிரஜை ஒருவர் கைது!
Thursday, March 29th, 2018
சட்டவிரோதமான முறையில் சுமார் ஒரு கோடியே 40 இலட்சத்து 23 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்கள் மற்றும் மாணிக்கக்கற்களை நாட்டிலிருந்து கொண்டு செல்லமுற்பட்ட சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நீர்கொழும்பு பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றை நடாத்திச் செல்பவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
துபாய் நோக்கி பயணிக்க இருந்த அவரின் பயணப்பொதியை சோதனையிட்ட போது குறித்த பணத்தொகை மற்றும் மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சைட்டத்தைப் பாதுகாக்கும் திட்டத்தால் நாட்டுக்கு அழிவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
தற்போது நிலவும் வறட்சி காரணமாக 46 ஆயிரத்து 904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு - விவசாய அமைச்சு தெரிவ...
எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூடுகின்றது நாடாளுமன்றம் - செயலாளர் நாயகம் குஷானி ரோஹன...
|
|
|


