எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூடுகின்றது நாடாளுமன்றம் – செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவிப்பு!

Saturday, May 4th, 2024

நாடாளுமன்றம் எதிர்வரும் 07 ஆம் திகதிமுதல் 10ஆம் திகதிவரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  எதிர்வரும் 07 ஆம் திகதி மு.ப 9.30 நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநாளன்று மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பிரிவிடல் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, பராட்டே சட்டத்தை 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்ககப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

கோரோனா காலத்தில் சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்கு விஷேட கொடுப்பனவு - அமைச்சர் ஜனக பண்டார தென்ன...
பால் உற்பத்திக் குறைவால் மக்களின் புரதச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது - அகில இலங்கை கால்நடை உற்பத்தி...
பாடசாலை கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது மாணவன் உயிரிழப்பு - மேலும் 5 மாணவர்கள் காயம் – ...