சைட்டத்தைப் பாதுகாக்கும் திட்டத்தால்  நாட்டுக்கு அழிவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

Monday, May 15th, 2017

இலங்கையில் தற்போதா அதிகமாகக் காணப்படும் பிரச்சினைகளில் டெங்குத் தாக்கமும் ஒன்றாகும். அதனை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் சைட்டம் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் திட்டங்கள் நாட்டின் அழிவு நிலையைத் தோற்றியுள்ளது. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அரச மருத்துவ அதிகாரிகள் நங்கம் இதனைத் தெரிவித்தது.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை மருத்துவச் சபையின் ழுங்கு முறைக்கு அடிபணியாமல் செயற்படும் சைட்டம் நிறுவனத்தை காப்பாற்றுவதற்கு சுகாதார அமைச்சர் முயற்சிக்கும் செயல் வெட்கப்பட வேண்டியது. சைட்டம் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சரின் தலையீடு தற்பொது நாட்டு மக்கள் முன்னிலையில் நிரூபனமாகியுள்ளது.

தனிப்பட்ட நலன் காரணமாகவே அமைச்சர் அதனை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.நாட்டில் டெங்கு பரவும் அளவ அதிகரித்துள்ளது. அதனைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது. சைட்டம் நிறுவனத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாகத்தானும் நிறுத்தி விட்டு டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிக பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: