இலங்கையின் இயற்கை அழகுகளை சித்தரிக்கும் முத்திரைகள் வெளீயீடு!

தபால் திணைக்களத்தின் தபால் தலை சேகரிப்பு பணியகம் நேற்றைய தினம் 12 புதிய முத்திரைகளை (தபால் தலை) வெளியிட்டுள்ளது.
இந்த முத்திரைகள் வரலாறு காணாத புதிய இயற்கை அழகுகளை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இயற்கையை பிரதிபலிக்கும் முகமாகவே குறித்த முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய முத்திரைகள் தபால் சேவைகள், மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எட்.எச். ஹலீமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேனை, முத்திரைகள் அமைச்சருக்கு பொது தபாலதிபர் ரோஹன அபேவிக்ரமவினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரியாவின் கார் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில்
வெளிவாரி பட்டப்படிப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் புதிய தீர்மானங்கள்!
மழையுடனான வானிலை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|