இலங்கைக்கான அமெரிக்காவின் முதல் தூதுவரின் கல்லறை கண்டுபிடிப்பு!

Monday, January 23rd, 2017

இலங்கைக்கான அமெரிக்காவின் முதலாவது தூதுவராக பணியாற்றிய ஜோன் பிளேக் என்பவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை அடையாளம் கண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

2016ஆம் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிலர் காலி நகரில் உள்ள கைவிடப்பட்ட ஒல்லாந்து திருச்சபைக்குரிய மயானம் ஒன்றில் மேற்கொண்ட தேடுதலில் தூதுவர் மற்றும் அவரது மனைவிக்குரிய கல்லறைகளை கண்டுபிடித்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதுவர் ஜோன் பிளேக் கல்லறையில் அவர் 1869 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி உயிரிழந்ததாக எழுதப்பட்டுள்ளதுடன் அவரது மனைவி 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் வழிநடத்தலின் கீழ் கல்லறை அமைந்துள்ள நிலம் அமெரிக்க கடற்படையின் மெரின் படையினரால் நேற்று காலை துப்பரவு செய்யப்பட்டது. ஒல்லாந்தர் காலத்திற்குரிய இந்த மயானத்தை தற்போது யாரும் பயன்படுத்துவதில்லை எனவும் அது நினைவிடமாக பேணப்பட்டு வருவதாகவும் ஒல்லாந்து திருச்சபையின் காலி அநுநாயக்கர் சுனில் பேர்டினட்டிஸ் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: