இணைய வழி குற்றங்களை தடுக்க விசேட பிரிவு!

Wednesday, August 3rd, 2016

இணைய வழி ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றங்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

1866 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட விசேட இலட்சினையொன்றும் நேற்று அறிமுகப்படுத்திவைக்கப்பட்டது.

பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்ட சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை பொலிஸ் திணைக்களம், இலங்கை  பொலிஸ் என மாற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதேவேளை அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் ஆகியோருக்கு மாத்திரம் மரியாதை செலுத்தும் தரப்பாகவே இலங்கை பொலிசாரை பார்க்கும் நிலை இருந்துவந்ததாகவும் தெரிவித்துள்ள அவர் இந்த நிலை மாற்றமடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மக்களின் நண்பனாகவே பொலிசார் இருக்க வேண்டும் என்றும், அந்த நிலையை இலங்கை பொலிசார் உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:

நாட்டை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ அரசின் நோக்கமல்ல - வெளிநாட்டு முதலீடுகளே எமது இலக்கு - வெளிவிவகா...
தேர்தல் சட்டங்களை திருத்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணை...
தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் - தேர்தல்கள...