இராணுவ வைத்திசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

சிங்கப்பூர் மகா கருண பௌத்த அமையம் ஒன்றினால் இராணுவ வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் ஒரு அங்கமாக சிங்கப்பூர் வாழ் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் குறித்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய நன்கொடையினை சிங்கப்பூரில் வசிக்கும் வணக்கத்துக்குரிய கலாநிதி கரவேடயன குணரத்ன தேரர் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் வைபவ ரீதியாக கையளித்தார்.
இந்த நிகழ்வில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா , சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி,மகா கருண பௌத்த அமையத்தின் பிரதிநிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
கலை என்பது சமகாலத்தை, சமூகத்தின் நடப்பியலை உணர்த்துகின்ற உயிர்ப்பு மையம் : ஓய்வு நிலைப் பிரதிக் கல்வ...
முல்லைக் கடற்கரையில் மர்மப்பொருள் வெடிமருந்து என்று சந்தேகம்?
அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு – அமைச்சர் நாமல...
|
|