இராணுவத்துடன் கேப்பாபுலவு மக்கள் சந்திப்பு!  

Sunday, September 17th, 2017

கேப்பாப்புலவு பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி போராடி வரும் மக்கள் எதிர்வரும் புதன்கிழமை 205 நாளில் இராணுவ அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் சந்தித்து பேச தீர்மானித்துள்ளனர்.

கேப்பாப்புலவு பகுதியை படையினர் தொடர்ந்தும் தம்வசம் வைத்துள்ளதனால் அப்பகதி மக்கள் தற்காலிகமாக கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் குடியேற்றப்பட்டன. அங்கு குடியேற்றப்பட்டோர் தொழில் வாய்ப்புக்கள் இன்றியுள்ளதுடன் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று 200 ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எமது போராட்டத்தின் விளைவாக வாக்குறிகள் வழங்கப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தின் 205 ஆவது நாள் கேப்பாப்புலவு இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை அழைத்து சந்திப்பொன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

Related posts: