இராணுவத்தின் முன்னாள் ஆலோசகருக்கு மரண தண்டனை!!
Wednesday, November 16th, 2016
கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை கடுமையாக தாக்கி கொலை செய்த இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த முன்னாள் விளையாட்டு ஆலோசகர் தன் மனைவியை கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபருக்கு எதிராக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டமையினால் மரண தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை மனைவியின் சடலத்தை மறைக்க முற்பட்டமைக்காக ஏழு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டதுடன் அபராதப் பணமாக ரூபா 5 ஆயிரம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts:
இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பது தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை - ஸ்ரீ ஜயவ...
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றுவோரின் பிரச்சினைக்கு தீர்வு – தயாராக இருக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிர...
எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை - அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


