பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்!
Thursday, December 8th, 2016
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் பாணதுறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாணதுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து மூன்று துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இவற்றில் இரண்டு குற்றவாளிகள் வசம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே, பிரதான பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts:
இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு - புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தே...
தொடரும் வரட்சியான காலநிலை - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்...
யாழில் வீசிய பலத்த காற்று - மரம் முறிந்து விழுந்ததால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதம்!
|
|
|


