இரண்டு நிர்ணய விலைகளால் நுகர்வோருக்கு பயன் இல்லை – நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு!

Sunday, February 19th, 2017

நிர்ணய விலைகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் உள்நாட்டு அரிசியும் இரண்டு விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோருக்கு பயன் கிட்டவில்லை என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் கடந்த 17 நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட நாடு அரிசி கிலோ ஒன்று 70 ரூபாவாகவும், உள்நாட்டு நாடு அரிசி கிலோ ஒன்று 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி கிலோ ஒன்று 70 ரூபாவாகவும், உள்நாட்டு பச்சை அரிசி கிலோ ஒன்று 78 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி கிலோ ஒன்று 80 ரூபாவாகவும், உள்நாட்டு சம்பா அரிசி கிலோ ஒன்று 90 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் அரசியின் விலை தொடர்பில் கண்காணிப்பதற்காக, நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர் இன்று கொழும்பின் சில பகுதிகளுக்கு சென்றிருந்தனர்.

இதன்போதே, குறித்த இரண்டு நிர்ணய விலைகளால் நுகர்வோருக்கு பயன் கிட்டவில்லை என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், புதிய நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அந்த விலைக்கு உள்நாட்டு அரிசியை விற்பனை செய்ய முடியாது என வர்த்தகர்கள் கூறுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

ad_235372325-1024x682 copy

Related posts: