உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு!

Friday, September 8th, 2023

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தயார் என  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பிலும், அதன் பின்னரான சர்ச்கைள் தொடர்பிலும் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புக்களுக்கு ஆதரவானது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ள அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னர்  புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவது வழமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சனல் 4 இன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தை ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்விற்கு முந்தைய நாடகமாக அரசாங்கம் கருதுகிறது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக இந்த வீடியோ குறித்து நிதானமான விதத்தில் பதிலை வெளியிட வேண்டும் எனவும் அரசாங்கம் கருதுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை சனல் 4 தொடர்பில் குற்றம்சாட்டியவர்கள் மாத்திரம் அதற்கான பதில்களை வழங்க வேண்டும், அரசாங்கம் வழங்க தேவையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் டெய்லி மிரர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: