இம்மாதம் இறுதியில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வருகை தருகின்றார் ஜனாதிபதி ரணில்!
Thursday, May 16th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்துவைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தின்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண விஜயத்தின் மற்றொரு அங்கமாக வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
"யாழ்ப்பாணம் அழகான மண்" - யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் !
தபால் சேவைகள் அதிகாரிகள் 353 பேருக்கு நிரந்தர நியமனம்!
பீட்டா அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் எழுச்சி...
|
|
|


