இன்றைய கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை!
Wednesday, August 24th, 2016
அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் புல்லாங்குழல், ஹோர்ன் ஒலி மற்றும் ஹூட்டர் போன்ற ஒலி எழுப்பப்படும் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி பகலிரவு போட்டியாக இன்று நடைபெறும் போட்டியை காண்பதற்கு வரும் ரசிகர்களை சோதனை செய்து மைதானத்திற்கு அனுப்புமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது. போட்டியை காணவரும் ரசிகர்கள் நேரகாலத்துடன் வருகை தந்து ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய அணி குறித்து கவாஸ்கர்!
தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க தொழில்நுட்பப் பயிற்சி!
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
|
|
|


