இன்று முதல் பரவிப்பாஞ்சான் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பிரதேச மக்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது போராட்டம் தொடர்பில் இதுவரை எந்தவொருவரும் உரிய பதிலை வழங்காத காரணத்தால் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கமே நாங்கள் உங்கள் நாட்டு மக்களே , எங்களையும் சற்றுத்திரும்பிப்பார் என பொறிக்கப்பட்ட வாசகங்களுடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜனாதிபதி ஜப்பான் பயணம்!
அப்பிள் கணக்குக்குள் நுழையக்கூடாது - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!
யாழ்ப்பாணத்தில் கடும் வறட்சி : குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு – நீர்ப்பாவனை விரயத்தைத் தவிர்த்து ச...
|
|