இன்று மன்னாரில் நீர் விநியோகம் தடைப்படும்!

Friday, August 26th, 2016

பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால் மன்னாரில் இன்று நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபைதெரிவித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர்வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதானவிநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள்மேற்கொள்ளப்படுகின்றது.

இதன் காரணமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை நீர்துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைதெரிவித்துள்ளது.

Related posts:


கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் - மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய ந...
வெகுவிரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி - நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!
இந்தியா நிதி உதவி – புனரமைப்பு பணிக்காக அனுராதபுரம் - வவுனியா புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்...