லஞ்சீற், பிளாஸ்ரிக் போத்தல்கள் இனிமேல் பாவிக்கப்பட மாட்டாது!

Wednesday, November 14th, 2018

சாவகச்சேரி நகரசபையினரின் பொன்விழா மண்டபத்தில் இருந்து இடம்பெறும் நிகழ்வுகளின் போது லஞ்சீற் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்கள் பாவிக்கப்பட மாட்டாது என நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற சபை அமர்வின் போதே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:

தை மாதத்தில் இருந்து சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெறுகின்ற திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் லஞ்சீற்றுக்குப் பதிலாக வாழை இலையும் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தலுக்குப் பதிலாக சில்வர் பேணிகளும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளை கட்டுப்படுத்துவதுடன் வாழைச் செய்கையையும் ஊக்குவித்து விவசாயிகள் வருமானத்தை உயர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

இடைப்பட்ட காலத்தில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல் பாவனை லஞ்சீற் உள்ளிட்ட நவநாகரிக ஆடம்பரப் பொருட்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் தலைதூக்கி இருந்த போதிலும் தற்போது மக்களாக உணர்ந்து அதனைத் தவிர்த்து பண்டைய தமிழர் கலாசாரத்தைப் பின்பற்ற முனைவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அதுவே நோய் நொடியற்ற வாழ்விற்கு அடித்தளம் எனவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

Related posts: