நெல் கொள்வனவு செய்கிறது அரசு!

Monday, December 19th, 2016

அரிசி விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காக நெல் கொள்வனவு சபையிடமிருந்து இன்று முதல் 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய அரசாங்க மற்றும் தனியார் ஆலைகளுக்கு இந்த நெல் விநியோகிக்கப்பட்டு, அரிசியாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த ஆலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் அரிசி லங்கா சதொச விற்பனை ஒரு கிலோ 78 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அரிசி விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்கு 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC03265

Related posts:

யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சாமாசத்திற்குப் புதிய கட்டடம்!
தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பே, துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்...
இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் - பிரதமர...