ஆவா குழு சந்தேகநபர்கள் கைது – ஜெனீவாவில் முறைப்பாடு!

Wednesday, November 9th, 2016

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் இயங்கி வரும் ஆவா என்ற பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சிலரைக் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களின் உறவினர்கள் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மனித உரிமை காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளாலி பிரதேசத்தைச் சேர்ந்த அலெக்ஸ் அரவிந்தன், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த கபில்நாத் சிவலிங்கம் மற்றும் பிரதாபன் கனரகட்னம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காப்பாற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனமொன்று, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கைதுகள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

unnamed (2)

Related posts:

சமுர்த்தி பெண் உத்தியோகத்தரால் தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்: அநாதையாக்கப்பட்ட பிள்ளைகள்!
உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடா...
தேர்தல் செலவினங்களை மட்டுப்படுத்தல் அவசியம் - சட்டமூலத்தை உடன் நிறைவேற்றுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நவீனமயப்படுத்தப்பட்ட கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவு இயங்க முடியாத நி...
பேக்கரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வட் வரி சலுகையை பெற்றுக் கொடுப்பதில்லை!
தேசிய பூங்காக்களில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!