ஆயுர்வேத வைத்தியர்கள் 213 பேர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

ஆயுர்வேத வைத்தியர்கள் 213பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் எல்.எச்.திலக்ரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் மே மாதம் அளவில் இந்த ஆயுர்வேத வைத்தியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர். இந்த எண்ணிக்கையுடன் மொத்தமாக ஆயுர்வேத வைத்தியர்களின் எண்ணிக்கையை 817 ஆக அதிகரிப்பதற்கான அனுமதி கோரிக்கை நிதி அமைச்சிடம் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வருடம் 107 ஆயுர்வேத வைத்தியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமையவே இந்த வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
Related posts:
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கூட்டுறவு பணியாளர்களுக்கு விசேட சலுகை!
இலங்கை கிரிக்கட் சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம்!
மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் – குற்றம் சாட்டுகிறார் நாடா...
|
|