ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு!
Saturday, May 6th, 2017
ஆசிரிய உதவியாளா்களின் மாதாந்த கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்று நிரூபங்கள் மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் சுனில்ஹெட்டி ஆராச்சி கையொப்பமிட்ட சுற்று நிரூபங்கள் அனைத்து மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 6 ஆயிரம் ரூபாவாக வழங்கப்பட்டுவந்த ஆசிரிய உதவியாளர்களுக்காக கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படவுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதமுதல் நிலுவையுடன் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
பொலிஸ் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தம் இல்லை -அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிப்பு!
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படையுங்கள் - தேர்தல்கள் ஆணைக்கு...
இந்திய அரசின் நிதியுதவி - இன்று எழிமையான முறையில் திறந்து வைக்கப்படுகிறது யாழ்ப்பாணம் கலாசார மையம்!
|
|
|


