ஆசிரிய உதவியாளர்களின் அவல நிலை!

Sunday, November 19th, 2017

ஆசிரிய உதவியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரையும், பிரதமரின் மக்கள் தொடர்பு ஆலோசகர்களையும் சந்தித்திருந்தனர்.

பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு ரூ.10,000 என்ற குறைந்தளவான வேதனமே வழங்கப்படுகிறது. ஆசிரிய சேவையின் 3 தரத்துக்கு நியமனம் பெற தங்களுக்கு தகுதி இருப்பதாகவும் தங்களது வேதனத்தை அதிகரிக்குமாறும் அவர்கள் கோரி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் பிரதமரின் ஆலோசகர் ஆகியோரை சந்தித்திருந்த நிலையில், இருவரும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவர்களின் கோரிக்கை தொடர்பாக கடிததங்களை வழங்கி இருந்தனர்.

இதன் அடிப்படையில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரையும் நேற்று அவர்கள் சந்தித்ததாகவும், அவர்களின் கோரிக்கையை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு தெரியப்படுத்துவதாக அவர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: