நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு!

Wednesday, August 9th, 2017

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் பட்சத்தில் அதற்கு தமது கட்சி ஆதரவு தெரிவிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

“மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் நாமே முதலில் முறைப்பாடு செய்தோம். தற்போதைய அரசாங்கம், தேர்தல் காலத்தின் போது ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் எதிராக செயற்படப் போவதாக தெரிவித்திருந்தது. எனினும் ஆட்சிக்கு வந்து ஓரிரு மாதங்களிலேயே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் ஊழலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.

தற்போது பிணைமுறி விவகாரம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது கட்சி ஆதரவளிக்கும்” என அவர் மேலும் தெரிவித்தா

Related posts:

சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் - அரச மருத்துவ ...
இணக்கப்பாடு இன்றி கலந்துரையாடல் நிறைவு - புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது...
கட்சித் தலைவர்களின் கருத்துக்களுடன், 21 ஆவது அரசியல் அமைப்புத்திருத்தம் அமைச்சரவையில் கலந்துரையாடப்ப...