அவுஸ்திரேலியா கறவை பசுக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
Wednesday, May 23rd, 2018
அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கறவை பசுக்கள் நோய்த் தன்மைகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட சில மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலங்குகளால் நுரையீரல் சார்ந்த மற்றும் பல நோய்கள் ஏற்படக்கூடும் என ஆய்வறிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பல வருடங்களாக உள்நாட்டு பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியாவில் இருந்து கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகின்றது.
Related posts:
விரைவில் வருகின்றது நுளம்புகளை ஒழிக்கும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் !
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு - கல்வி அமைச்சர் ஜி...
இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள ...
|
|
|


