விரைவில் வருகின்றது நுளம்புகளை ஒழிக்கும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் !

Tuesday, January 10th, 2017

நாட்டில் சவால் மிக்கதாக காணப்படும் நுளம்புகளை ஒழிக்கும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான முறையில் சூழலை வைத்திருப்போரிடம் அறவிடப்படும் 1000 ரூபா குறைந்தபட்ச அபராதத் தொகையானது 5000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமுக வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் ஊடாக நுளம்பு ஒழிப்புப் பணிகள் துரிதமாக வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மேல் மாகாணம் உள்ளிட்ட காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கல்முனை நகரிலும் இந்த நாட்களில் டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமுக வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்

timthumb

Related posts: