பாடசாலை மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியரும் மாணவர்களும் காயம்!

Wednesday, June 15th, 2022

வெலிமடை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தென்னை மரமொன்று  முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த 09 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பாடசாலை ஆய்வுகூடத்தின் மீது இன்று(15) முற்பகல் 9.45 மணியளவில் தென்னை மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு சௌபாக்யா கடன் திட்டத்தின்கீழ் உதவ மத்திய வங்கி நடவடிக...
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பிரதமரின் தலை...
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் - மத்தி...