அலவாங்கால் தாக்கப்பட்ட இளம் குடும்பத் தலைவர் சாவு – கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
Saturday, February 11th, 2017
தனிப்பட்ட தகராறு காரணமாக அலவாங்கால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பத் தலைவர் 8 நாட்களின் பின் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் அதிகாலை சாவடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தவைலர் மீது தாக்குதல் நடத்தியவர் கடந்த 9 நாட்களான தலைமறைவாகியிருந்த நிலையில் அவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் அகிலன் (வயது-28) என்பவரே சாவடைந்தார்.
கைது செய்யப்பட்ட நபர் நேற்றுக் காரல கைத செய்யப்பட்டு விசாரணைகளின் பின் இன்று நீதிவான் மன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
'கியான்ட'' புயலால் பாதிப்பு இல்லை!
சுதுமலையில் நேற்றிரவு வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்!
கிளிநொச்சியில் ஆசிரியைகளை கடத்த முயற்சித்த காடையர்கள் மடக்கிப் பிடிப்பு!
|
|
|


