‘கியான்ட” புயலால் பாதிப்பு இல்லை!

Wednesday, October 26th, 2016

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. கியான்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தமிழகத்தில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 850 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

கியான்ட் புயல் சின்னம் காரணமாக தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர், கடலுர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் இன்று புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. ஒடிசா, வடக்கு கரையோர ஆந்திரா பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0492218aed8bb04e78d5205989b4ab7a_L

Related posts: